இன்று முதல் சம்பளம், ஓய்வூதியம், வட்டி, பிற பேமெண்ட்ஸ், முதலீடுகள் ஆகிய சேவைகள் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் மூலம் வங்கி விடுமுறை நாட்களிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் வசதிகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. NACH என்பது NPCI ஆல் இயக்கப்படும் பல்க் பேமெண்ட் சிஸ்டம். இது சம்பளம், ஓய்வூதியம் போன்ற பல பரிமாற்றங்களுக்கு உதவுகிறது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
வங்கி நாட்களில் மட்டுமே செயல்பட்டு வந்த என்ஏசிஹெச் (NACH) இன்று முதல் அனைத்து நாட்களிலும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் இனி சம்பள தேதியில் நிறுவனங்கள் சம்பளத்தை வரவு வைக்க முடியும்.அதே சமயம் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையைச் விடுமுறை நாட்களிலும் எடுத்துக் கொள்ளப்படும். அப்போது உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிடின் அபராதம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.