திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆகஸ்ட்27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆவணிமாத திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது என்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் கோவிலில் ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இல்லாமல் கோவில் பணியாளர்கள் மூலமாக நடைபெற்றது. பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே ஆவணித்திருவிழா நிகழ்வுகளை யூடியூப் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 10 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.