கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் மதுரை – செங்கோட்டை இடையே இன்று (ஆகஸ்ட் 30-ஆம் தேதி) முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க மதுரை தெற்கு கோட்ட ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா காரணமாக மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல்வேறு கோரிக்கைகளை அடுத்து மீண்டும் மதுரை – செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று முதல் ரயில் இயக்கப்படவுள்ளது.