Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வு…. மது பிரியர்களுக்கு அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் மதுக்கடைகள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் அனைத்து மதுபானங்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்படுவதாக கலால் துறை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 20 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால் நூறு ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானம் 20 ரூபாய் அதிகரித்து ரூ.120 க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |