ஒடிசா மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் புத்தாண்டு மற்றும் புத்தாண்டு தினங்களில் சுற்றுலாத்தளங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு ஒடிசா அரசு தடை விதித்துள்ளது. உணவகங்கள் மற்றும் வேறு எந்த இடங்களில் எந்தவித கலாச்சாரம் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படாது. மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்.
மேலும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும். அனைத்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பிற மத இடங்கள் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதிய வழிகாட்டுதல்கள் இன்று முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து நகர்ப்புறங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை அரசு விதித்துள்ளது.