திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள் மற்றும் அணைகளை பார்வையிடவும் நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் கடந்த மூன்று மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.நவம்பர் 7 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த உத்தரவு மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள்,அணைகள் மற்றும் நீச்சல் குளங்களுக்கு செல்ல நவம்பர் 8ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Categories
இன்று முதல் நவம்பர் 21 வரை பூங்காக்கள், அணைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!