இன்று முதல் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெளியில ஆரம்பமாகிறது.
ஆண்டுதோறும் கோடையில் நிலவும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்கியுள்ளது. கத்திரி வெயில் தொடங்கி 25 நாட்கள் இருக்கும். அதன்படி மே 29-ஆம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும். மற்ற நாட்களை விட கத்திரி வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிக அளவு வெப்பம் பதிவாகும்.
சில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது. இந்த நிலையில் கத்திரி வெயில் இன்று தொடங்குவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடை அணிவதுடன், நீர் சத்து நிறைந்த பழங்களை உண்ண வேண்டும். முடிந்த வரை வெளியில் செல்லாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.