Categories
மாநில செய்திகள்

இன்று முதல் திறப்பு…. இனி இந்த பிரச்சனை இருக்காது…. பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!!

சென்னை கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரே 100 அடி சாலையில் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மேம்பாலம் 93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்தது. கோயம்பேடு ஜெய்ப்பூர் பூங்காவில் தொடங்கிய தேமுதிக அலுவலகம் வரை இந்த பாலம் செல்கிறது.இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் நேரில் சென்று திறந்துவைக்க உள்ளார்.புதிய மேம்பாலம் திறக்கப்படுவதால் மூலம் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும்  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாஉசி 150-வது பிறந்த நாள் விழாவையொட்டி புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.முன்னதாக வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.இதில் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலை இறைக்கும் மேல்தட்டு மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

Categories

Tech |