நெல்லை மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 2 வருடங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற சுற்றுலா தலங்களை போல பாபநாசம், மணி முத்தாறு அருவிகளுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாபநாசம், அகஸ்த்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் இன்று முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.