டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என்று TNPSC தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஏப்.28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குரூப் 4-ல் 7,382 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 7,382 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி https//www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.