Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் எல்லாம் மாற போகுது…. புதிய விதிமுறைகள் அமல்…. இதோ மொத்த லிஸ்ட்…!!!

ஒவ்வொரு மாதமும் மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் விலை ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மாதமும் அமலுக்கு வருகின்றன. இவை பெரும்பாலும் பொது மக்களின் தினசரி வாழ்வு சார்ந்தவையாகவே உள்ளது. அந்த வகையில் நவம்பர் மாதம் என்னென்ன மாற்றம் அவளுக்கு வந்துள்ளது என்பதை இதில் காணலாம்.

சிலிண்டர் விலை:
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் சமையல் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது.இந்த மாதத்திலாவது சிலிண்டர் விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த மாதம்தான் சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.915.50 – க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா:

இன்று முதல் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கும், டெபாசிட் செய்வதற்கும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி கட்டணம் வசூலிக்கப் போகிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்குக் கூட இனி சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

சிலிண்டர் புக்கிங்:

இன்று  முதல் சமையல் சிலிண்டர்களுக்கான டெலிவரி முறை மாறவிருக்கிறது. சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த ஓடிபி நம்பரை வாடிக்கையாளர்கள் டெலிவரி பார்ட்னரிடம் தெரிவிக்க வேண்டும். சிலிண்டர்கள் வாங்குவதை பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் இந்த செயல்பாட்டில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் இல்லை:

இன்று முதல் குறிப்பிட்ட சில மொபைல் போன்களில் WhatsApp இயங்காது. நவம்பர் 1 முதல் சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் ஆப் செயல்படாது. புதிய அப்டேட்டின்படி, Android 4.0.3 Ice Cream Sandwich, iOS 9 மற்றும் KaiOS 2.5.0 ஆகியவற்றில் வாட்ஸ் ஆப் இயங்காது. எனவே இந்த இயங்குதளங்கள் உள்ள மொபைல் போன்களில் இனி வாட்ஸ் ஆப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் அட்டவணை மாற்றம்:

ரயில்களின் கால அட்டவணை நாளை முதல் மாறவிருக்கிறது. இன்று முதல் நாடு முழுவதும் உள்ள பல ரயில்களின் கால அட்டவணையை இந்திய ரயில்வே துறை மாற்றுகிறது. அக்டோபர் 1 முதல் ரயில்களின் கால அட்டவணையை மாற்ற ரயில்வே திட்டமிட்டது. ஆனால் இத்திட்டம் பின்னர் அக்டோபர் 31க்கு ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக நவம்பர் 1 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. இதன்படி, 13,000 பயணிகள் ரயில்கள் மற்றும் 7,000 சரக்கு ரயில்களின் நேரம் மாறுகிறது.

Categories

Tech |