சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15-ஆம் தேதி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 40 நாட்கள் மண்டல கால பூஜைகள் நடைபெறும் என்பதால் பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று முதல் அரசு விரைவு பேருந்து கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாக்களின்போது பக்தர்கள் சென்று வர ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை சென்னை, மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.