தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இன்று மாலை இரண்டு லட்சம் தடுப்பூசி வர உள்ளது.
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட தயாராக இருந்தாலும், தடுப்பூசி இருப்பு இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் தடுப்பூசிகள் இன்று பகல் 12 மணிக்கு தீர்ந்துவிடும். இதையடுத்து மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு இன்று மாலை 5.30 மணிக்கு 2 லட்சம் கோவிஷீல்டு சேர்ந்து தடுப்பூசி வர உள்ளதாக அவர் தெரிவித்தார். மாலை சென்னைக்கு வரும் தடுப்பூசிகள் உடனடியாக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. போதுமான தடுப்பூசிகள் இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளதாக என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.