சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதால் இன்று மாலை முதல் முன்பதிவு தொடங்குகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் படம் பாதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.
அதன் அடிப்படையில் சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை முதல் முன்பதிவு தொடங்குகிறது. அதன்படி பக்தர்கள் அனைவரும் sabarimalaonline.org என்ற இணையத்தளத்தில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் தினசரி பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து 2000 ஆகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டாயிரத்தில் இருந்து 3000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஐயப்ப பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.