Categories
மாநில செய்திகள்

இன்று மாலைக்குள்…… சற்றுமுன் ட்விஸ்ட் கொடுத்த ஓபிஎஸ்…… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியான நிலையில் பொதுக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நாளை கட்டாயம் நடைபெறும் என்று எடப்பாடிபழனிசாமி தரப்பினர் உறுதியாக தெரிவித்து இருந்தனர். மேலும் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கையை ஓங்கி உள்ளது.

இதனால் பொதுக்குழுவை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு செய்திருந்தார். மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் பொதுக்குழுவை புறக்கணிக்க கோரி கடிதமும் எழுதியிருந்தார். ஆனால் பொதுக்குழுவுக்கு வாருங்கள் என்று ஓ பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார்கள். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் வாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பொதுக்குழுவில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு மாலைக்குள் சொல்கிறேன்… கொஞ்சம் காத்திருங்கள்.. என்று செய்தியாளர்களிடம் சுருக்கமாக ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். வானகரத்தில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு தொடர்பாக இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாலை 5 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |