தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்தன. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள பொது தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் www.dge.tn.gov.in ஏன்டா இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வு கால அட்டவணை உள்ளிட்ட கூடுதல் தகவல்களையும் இதில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .