ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் ஒடிசா மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மாலை 3.30 மணி அளவில் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலுக்கு செல்ல இருக்கிறார். அதன் பிறகு புவனேஷ்வர் நகரில் அமைந்துள்ள எட்டு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். ஜனாதிபதியின் பயணத்தில் அதிக அளவிலான பாதுகாப்பு வாகனங்கள் இயக்கப்படும் என்பதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே புவனேஸ்வர் நகரில் உள்ள அரசு அலுவலக மற்றும் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கும் இன்றும் மதியம் அரை நாள் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதியம் ஒரு மணி முதல் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.