Categories
பல்சுவை

இன்று போகி பண்டிகை…. உடனே காப்பு காட்டுங்க…. எதுக்கு தெரியுமா….?

போகிப் பண்டிகை என்றால் வீட்டில் உள்ள பழையனவற்றை தீயிட்டு கொளுத்துவது என்பது மட்டுமே இன்றைய தலைமுறையினர் தெரிந்து வைத்திருக்கின்றனர். உண்மையில் போகிப் பண்டிகை கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் தூய்மையே. பருவநிலை மாற்றங்களின் அடிப்படையில் ஒரு வருடத்தை தமிழன் இரண்டாகப் பிரித்தான்.  ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தென் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு வடகிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்க தொடங்குகிறது.

இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவே தூய்மையை கொண்டாடும் நாளாகப் போகிப் பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இன்று போகிப் பண்டிகை என்றால் வெறுமனே ஏதோ ஒன்றை கொளுத்த வேண்டும் என மக்கள் கருதுவதாக கூறுகிறார் பாரம்பரிய சித்த மருத்துவர். போகி அன்று தங்கள் இருப்பிடங்களை சுத்தம் செய்வது மட்டுமல்லாது தங்கள் அகத்தையும் சுத்தம் செய்ய மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே போகிப் பண்டிகையின்போது வீட்டில் காப்பு கட்டப்படுகிறது.

கிருமிநாசினியாக இருக்கக்கூடிய வேப்பிலை, ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய ஆவாரை, சிறுநீரகத்தை சுத்தபடுத்த கூடிய சிறுபிள்ளை இந்த மூன்றையும் சேர்த்து வீட்டு முற்றத்தில் காட்டுவதே காப்பு கட்டுவது. அகத்தை சுத்தப்படுத்தும் இந்த மூலிகைகளின் நற்குணங்களை மக்கள் அறிந்து கொள்ளவே அதை வீட்டின் முற்றத்தில் காட்ட அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு பண்டிகையையும் ஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்வதோடு இன்றைய தலைமுறையினருக்கும் அதைக் கொண்டு சென்றால் ஆரோக்கியத்துடன் வாழலாம்

Categories

Tech |