Categories
தேசிய செய்திகள்

இன்று ( பிப்.7 ) பொது விடுமுறை…. பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று மகாராஷ்டிரா அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்திலும் அரை நாள் பொது விடுமுறையை முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Categories

Tech |