பாரா மெடிக்கல், நர்சிங் மற்றும் பி ஃபார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பாராமெடிக்கல் மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் லிஸ்ட் அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். அதன் பிறகு பேட்டி அளித்த அவர், மொத்தமுள்ள 17, 233 இடங்களில் சேர 83 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்துள்ளனர்.36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும்.இதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Categories
இன்று (செப்… 21) பாராமெடிக்கல் கலந்தாய்வு…. மாணவர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
