தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது இதனால் ஏரி, குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. அந்தவகையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக இன்று காலை 11 மணி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் தேதிக்கு பதில் முன்கூட்டியே நீர் திறக்கப்படுகிறது. 137 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.