ஆடி கடைசி சனிக்கிழமையான இன்று கருடாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பெருமாள் கோவிலில் வழிபட வேண்டிய முதல் கடவுள் கருடாழ்வார். கருட விரதம் இருப்பது மிகவும் நல்லது. கருடன் பட்சிகளின் ராஜா என்று கூறப்படுகின்றது. அவர் தைரியத்தையும், மங்களத்தையும் அருளக் கூடியவர். நாகதோஷம் உள்ளவர்கள் நாக பூஜைகள் செய்வதைவிட அவரை வணங்கி வழிபட்டால் போதும்.
கருட வழிபாடு நாகதோஷத்தை நீக்குவது மட்டுமல்லாமல் வியாதிகளை நீக்கும். மரண பயத்தை நீக்கும் வல்லமை கொண்டது. கருட வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். உண்மையான பக்தியோடு பெருமாளை வேண்டுபவர்கள் அனைவருக்கும் கருடன் காட்சி தருவார். நம் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது கருடன் உங்களின் வலமிருந்து இடமாக போனால் நீங்கள் எத்தனித்த காரியம் வெற்றியடையும். கருடன் வட்டமிடுவதை பார்த்தால் உங்களுக்கு நலத்தையும், லாபத்தையும் கொடுக்கும்.