மாநில சுகாதாரத் துறையின் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா பேரிடர் காலத்திலும் சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கடந்த ஆண்டு நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இருப்பினும் இவர்களுக்கு ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தற்போது இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது செய்தியாளர்கள் சந்திப்பின் போது புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி, “மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.6,000-லிருந்து ரூ.13,000-ஆகவும், மருத்துவர்களுக்கு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.