உதகை – நீலகிரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவு காற்று, வீசுவதால் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உதகையில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மழை கொட்டி வருகிறது. முன்னேற்பாடாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.