Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று இந்த மாவட்டங்களில்….. கனமழை பெய்ய போகுது…… வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 11ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர்,  நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |