Categories
மாநில செய்திகள்

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழகம் புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |