இன்று நவீனம் அடைந்த இந்த உலகில் கூட இன்னும் விடை தெரியாத பல மர்மங்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட 5 மர்ம கோவில்களை பற்றி இந்த பார்ப்போம்.
1. வீரபத்திர கோவில் – ஆந்திரா:
கிபி 1650 ஆம் ஆண்டில் ஆந்திராவிலுள்ள அனந்த்பூரில் கட்டப்பட்ட கோவில்தான் வீரபத்திரர் கோவில். இக்கோவில் சுமார் 70 மாபெரும் தூண்கள் கொண்டு உள்ளன. அவற்றில் ஒரு தூண் மட்டும் தரையை தொடாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 70 அடி உயரம் கொண்ட இந்த மாபெரும் தூணை எந்த சக்தி தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
1919 ஆம் ஆண்டில் ஆங்கிலேய பொறியாளர் ஒருவர் மர்மத்தை மறைக்க நவீன தொழில்நுட்பத்துடன் அடிப்பாகத்தை தரையுடன் இணைக்க முயற்சித்தார். தூணின் ஒரு முனையை தரையுடன் இணைத்து விட்டார். ஆனால் கோவிலின் மேல்தளம் சேதமடைய தொடங்கியதால் இம்முயற்சியை பாதியிலேயே கைவிட்டு விட்டார் ஆங்கிலேய பொறியாளர்.
மேலும் இக்கோவிலில் 3 அடி நீளம் கொண்ட மாபெரும் கால்தடம் ஒன்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
2. கோனார்க் சூரிய கோவில் – ஒரிசா
1755 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த சூரிய கோவிலானது ஒரிசாவில் உள்ள கோனார்க் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆனது சுமார் 24 சக்கரம் கொண்ட தேரினை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வது போன்ற அமைப்புடைய ஒரு அடித்தளத்தின் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 24 சக்கரம் 24 மணி நேரத்தையும், ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களையும் குறிக்கின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த சக்கரங்களில் உள்ள ஆறு நிலைகளை கொண்டு தற்போது உள்ள நேரத்தை கூட துல்லியமாக கூற முடிகிறது.
சுமார் 800 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கோவிலின் சக்கரம் இன்றைய நேரத்தை துல்லியமாக காட்டுவது எப்படி என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. மேலும் இக்கோவிலில் ஒவ்வொரு பெரிய தூண்களும் ஒரு சிறிய இரும்புத் தகட்டில் மிகவும் சாதாரணமாக இணைக்கப் பட்டிருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
3. கைலாசநாதர் கோவில் – எல்லோரா
கிபி எட்டாம் நூற்றாண்டில் முதலாவது கிருஷ்ணா மன்னனால் எல்லோராவில் கட்டப்பட்டதுதான் இந்த கைலாசநாதர் கோவில். இக்கோவிலை முழுவதுமாக கட்ட கிட்டத்தட்ட 4 லட்சம் டன் பாறையை கோவிலின் மேலிருந்து கீழ் நோக்கி வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.
ஆனால் 18 வருடங்களிலேயே கட்டிமுடிக்கப்பட்ட இக்கோவிலில் இருந்த மொத்த தொழிலாளர்களும் ஒருநாளைக்கு 12 மணி நேரமும் இடைவேளை இன்றி பாறைகளை வெட்டி எடுத்தாலும், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 60 லிருந்து 65t என்ற வேகத்தில் அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5 டன் வரை தொடர்ந்து வெட்டி அப்புறப்படுத்தி இருந்தால் மட்டுமே இது சாத்தியமாக இருக்க முடியும்.
இது இன்று இருக்கும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் கூட சாத்தியம் இல்லாத நிலையில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் சாதாரண ஊழி மற்றும் சுத்தியை கொண்டு வெறும் 18 வருடங்களில் எவ்வாறு இந்த கோவிலை உருவாக்கினார்கள் என்று என்பதும் மர்மமாகவே உள்ளது.
4. பத்மநாப ஸ்வாமி கோவில் – கேரளா
கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் தான் உலகிலேயே மாபெரும் பணக்கார கோவில் ஆகும். இது கட்டப்பட்ட இடம் இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இக்கோவிலில் ஏ, பி, சி, டி என பெயரிடப்பட்ட 8 பாதாள அறைகள் உள்ளன. அவற்றில் தற்போது 5 மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஏ என்ற பாதாள அறை திறக்கப்பட்டபோது தங்கம் மற்றும் வைர நகைகள், தங்கத்தினாலான யானை சிலைகள் 500 கிலோ எடை கொண்ட கழுத்தணி முதலியவைகள் கிடைத்துள்ளன. சுமார் 1லட்சத்து 41 ஆயிரத்து கோடி மதிப்புள்ள இந்தப் புதையலை வெளியே எடுப்பதற்கு 12 நாட்கள் தேவைப்பட்டுள்ளது.
இக்கோவிலில் மாபெரும் மர்மம் என்னவென்றால் இன்றுவரை திறக்கப்படாத பி என்னும் ஏழாவது பாதாள அறையின் கதவுகள் முற்றிலும் இரும்பினாலும் மேற்புறத்தில் இரண்டு நாகப்பாம்பின் சிலையும் எளிதில் திறக்க முடியாதபடி பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையினுள் என்ன இருக்கிறது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
5. பிரகதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்
கிபி பத்தாம் நூற்றாண்டில் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கோவில் தஞ்சையில் கட்டப்பட்ட பெரிய கோவில்தான். உலகின் அடுத்த மர்மத்தை சுமந்து நிற்கிறது. 216 அடி உயரம் கொண்ட தஞ்சை பெரிய கோவிலில் கட்ட சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன் கிரானைட் கற்களை பயன்படுத்தி உள்ளனர்.
ஆனால் இக்கோவிலை சுற்றி 70 கிலோ மீட்டர் வரை கிரானைட் கற்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் இக்கோவிலின் முதன்மை கோபுரத்தின் மீது அமைந்துள்ள கோபுர கலசம் ஆனது 8,100 கிலோ எடையுள்ள ஒரே கல்லினால் ஆனது சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு எந்த தொழில்நுட்பமும் இல்லாத அக்கால கட்டத்தில் வெறும் யானைகளை மட்டும் கொண்டு எப்படி இவ்வளவு பிரம்மாண்ட எடையுள்ள கல்லை 216 அடி உயரத்தில் பொருத்த முடிந்ததது என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.