Categories
மாநில செய்திகள்

இன்றும்,நாளையும்… தலைமைச் செயலகம் இயங்காது… இதுதான் காரணம்…!!!

கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சுத்தம் செய்வதற்காக தலைமைச்செயலகம் இன்றும், நாளையும் மூடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் பணியிட வளாகம் மற்றும் பொது பகுதிகளை தொற்று பாதிப்பு இல்லாமல் வைத்துக் கொள்ளும் நோக்கத்தில், அதனை சுத்தப் படுத்த மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.அவ்வகையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்வதற்காக இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டு சுத்திகரிப்பு பணி நடத்தப்படவேண்டும்.

அதனால் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், சென்னை தலைமை செயலகத்தில் இருக்கின்ற அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து அலுவலகங்களையும் சுத்தம் செய்வதற்காக பத்தாம் தேதி முழுவதும் தலைமை செயலகம் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Categories

Tech |