காதல் கொண்டேன் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காக சென்ற இடத்தில் தனுசை சந்தித்து பேசி காதலில் விழுந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணம் ஆகி 18 வருடங்கள் கழித்து இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். தனுஷும் தங்கள் பிரிவு பற்றி ஜனவரி 17ஆம் தேதி இரவு சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தனுசை பிறந்துவிட்டாலும் twitter instagramல் இன்னும் அவரை ஐஸ்வர்யா பின் தொடர்ந்து வருகின்றார். பிரிவுக்குப் பின் ஒருவரை மற்றொருவர் குறை சொல்லாமல் அவரவர் வேலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரிந்து வாழ்ந்தது போதும் ஐஸ்வர்யா என்று தனுஷ் தான் சமாதான பேச்சை தொடங்கி இருக்கின்றாராம். இதனைத் தொடர்ந்து இருவரும் அவ்வபோது சந்தித்து பேசி வருகின்றார்கள். திருமண நாளான நவம்பர் மாதம் 18ஆம் தேதி தாங்கள் மீண்டும் சேரும் முடிவை அறிவிக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது. தனுஷ் பிரிந்த பிறகு ட்வீட்டர் இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆக்டிவாக இருக்கின்றார். அவர் என்ன ட்ரீட் போட்டாலும் இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டாலும் அண்ணனுடன் மீண்டும் சேர்ந்து விடுங்கள் அண்ணி என தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தன் மகள் கணவருடன் சேர்ந்து வாழ்வது தான் ரஜினியும் ஆசைப்படுகின்றாராம்.