விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரண தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2021-2022 வடகிழக்கு பருவமழையின் போது அதில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சாகுபடி செய்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஹெக்டேருக்கு 20 ஆயிரம் வழங்கிட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி விவசாயிகளுக்கான நிவாரணத் தொகை ரூ.7,10,57,600/- வழங்கிட அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 7016 விவசாயிகள் பயனடைவார்கள்.
மேலும் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக புதுச்சேரியைச் சேர்ந்த 6054 விவசாயிகளுக்கு ரூபாய். 5,97,11,200, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 731 விவசாயிகளுக்கு ரூபாய், 97,55,800 மற்றும் ஏனாம் பகுதியை சேர்ந்த 231 விவசாயிகளுக்கு ரூபாய்,15,90,600 துபாயில் விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.