தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கவள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவேஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் சம்பவம் நடக்கும் என்று Tamilnadu weatherman ப்ரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார்.
வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் கனமழை வரும் என்பதைதான் அவர் அப்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியிருந்தாலும் நவம்பர் மாதத்தில் மழை அதிகமாகவே பெய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.