Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

இன்னும் 1 மணி நேரத்துல… கடுமையான எச்சரிக்கை…. முக்கிய கட்டத்தை எட்டிய புயல் …!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் 40கி.மீ வேகத்தில் வீசுகிறது. சென்னையில் மணிக்கு 60கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில்  புயலின் வேகம் கடலூரில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. புயல் 14லிலிருந்து  16 கிலோ மீட்டராக வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. 120திலிருந்து 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் புயல் கரையை கடையை கரையைக் கடக்க தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |