பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.
விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து உள்ளனர். மாலை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் அமித்ஷா பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் வியூகம், கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே தற்போது தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சந்தித்துள்ளார். இதனால் திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமித்ஷா இன்னும் வர ஒரு மணி நேரம் இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கு பரபரப்பு வந்துள்ளது என பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.