ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் நந்தகோபால். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற இளைஞரோடு ஐந்து வருடங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் இது எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்று விட்டதாக நினைத்து அந்த பெண் தனது கள்ளக்காதலனுக்கு போன் போட்டு வீட்டிற்கு அழைத்து தனியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது சமயம் பார்த்து வந்த நந்தகோபால் இருவரையும் கையும் களவுமாக பிடித்து வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் அங்கேயும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே இருந்துள்ளனர். இதை பார்த்த நந்தகோபால் நீங்கள் இன்னும் பிரியாமல் இருக்கிறீர்கள் என்று ஆத்திரப்பட்டு கறி வெட்டும் கத்தியால் இருவரையும் வெட்டியுள்ளார். இதனால் பிற நோயாளிகள் அலறியடித்து ஓடி இருக்கிறார்கள். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நந்தகோபாலை கைது செய்துள்ளனர்.