ஜனாதிபதி உரையுடன் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் தாக்கல் ஆகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆவணங்கள் ஏதுமின்றி ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை. காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் மூலம் அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். 3வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கொரோனா பாதிப்புக்கு பிறகான பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் இதுவாகும்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்றாவது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதாக குடியரசுத் தலைவரிடம் முறைப்படி பெரிய படுத்துகிறார் நிதியமைச்சர். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பட்ஜெட் உரை முடிந்தபின் யூனியன் பட்ஜெட் என்ற செயலி மூலம் தகவல்கள் பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் தெரியவந்துள்ளது.