உலக நாடுகள் முழுவதும் கொரோனா பிரச்சினையே முடியாத நிலையில் தற்போது H1N2 வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முறையாக கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து படிப்படியாக இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் மனித இயல்பு நிலையையே இந்த வைரஸ் புரட்டி போட்டு விட்டது. மேலும் தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில், கனடாவில் ஒருவருக்கு புதிதாக H1N2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பன்றி காய்ச்சலுக்கான வைரஸ் ஆகும். இதுவரை உலகில் பன்றிக்காய்ச்சல் வைரசால் 20 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர் வசித்த பகுதிக்கு அருகில் யாருக்கும் இது மாதிரியான நோய்த்தொற்று காணப்படவில்லை. எனவே பொதுமக்கள் இந்த நோய் தொற்று குறித்து பீதி அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது. மேலும் இந்த வைரஸ் நாம் சாப்பிடும் உணவுகளிலிருந்தோ, பன்றி இறைச்சி சாப்பிடுவதாலோ பரவாது. இவ்வைரசால் பாதிக்கப்பட்ட பன்றிகளின் அருகில் செல்லும் போது நோய்த்தொற்று ஏற்படும். மேலும் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.