Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இன்னும் எத்தனை சித்ரா, சஹானாக்கள் தூக்கிட்டு தற்கொலை செய்யப் போகிறார்கள்….???? கேள்வி எழுப்பும் ரசிகாஸ்…!!!!

ரசிகர்கள், இன்னும் எத்தனை சித்ரா சஹானாக்கள் தூக்கிட்டு தற்கொலை செய்யப் போகிறார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 22-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை பார்த்ததாகவும் கூறினார்.

இதையடுத்து போலீஸார் சஹானாவின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான அடையாளங்கள் எதுவும் இல்லாததால் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். இதையடுத்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுவதால் கணவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

இதனால் தமிழ் ரசிகர்களுக்கு தற்பொழுது விஜே சித்ராவின் ஞாபகம் வந்துவிட்டது. சித்ராவும் ஹேமந்தை திருமணம் செய்துகொண்டு கஷ்டப்பட்டார். மேலும் அவர் நடித்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து கொண்டார். இதுபோலவே சஹானாவும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் பெற்றோரைப் போலவே சஹானாவின் பெற்றோரும் சஜத் தான்  மகளை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் இன்னும் எத்தனை சித்ரா, சஹானாக்கள் இப்படி தூக்கிட்டு தற்கொலை செய்ய போகிறார்கள். இதற்கு ஒரு எல்லையே இல்லையா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

Categories

Tech |