Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்னும் உங்க ஹனிமூன் முடியலையா…?” நயனுடன் கைகோர்த்தப்படி விக்கி…. பிக் வைரல்…!!!!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்னேஷ் சிவன், நயனுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

அதன்படி விக்கி -நயன் இருவரின் திருமணமும் கடந்த ஜூன் 09ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது.

திருமணம் முடிந்த பிறகு இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றார்கள். பின் ஊர் திரும்பியதும் தங்களின் வேலைகளில் கவனம் செலுத்தினர். இதையடுத்துச் சென்ற மாதம் ஸ்பெயினுக்கு இரண்டாவதாக ஹனிமூன் சென்றார்கள். மேலும் அங்கு எடுக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன் நயனுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் ஒரே மாதிரியான டி-ஷர்ட் அணிந்துள்ளார்கள். அந்த புகைப்படத்தை பகிர்ந்து விக்னேஷ் சிவன் 9/9 என குறிப்பிட்டு ஹார்ட்டீன்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் முடியலையா? இவ்வளவு நாள்ல எங்க போனீங்க என கேட்டு வருகின்றார்கள்.

https://www.instagram.com/p/CiSwWPSPEYN/?utm_source=ig_embed&ig_rid=1d883a53-6d5a-4b22-9415-541bdac87b0d

Categories

Tech |