Categories
மாநில செய்திகள்

இன்னும் இது நடக்குது…. வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை…. வசமாக சிக்கிய மாப்பிள்ளை குடும்பம்….!!

வரதட்சனை கொடுமையால் பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் கணவரையும் அவரது பெற்றோரையும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அவருடைய கணவருக்கும் கணவரின் பெற்றோர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை அவர்கள் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது “எங்கள் மகன் திருமணமான நாளில் இருந்து தனியாகத்தான் வசித்து வந்தார். மருமகளின் தற்கொலைக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என அதில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகனுடன் சேர்ந்து பெற்றோரும் மருமகளை துன்புறுத்தியது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகனுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை மற்றும் பணம் நகைகளை வாங்கி வருவதாகவும் கூறியுள்ளனர். இவ்வளவும் மகனின் பெற்றோர்கள் செய்துவிட்டு தண்டனையிலிருந்து தப்பிக்க வழி தேடுகிறார்கள். ஒரு குழந்தையை பெற்றெடுத்து நன்றாக வளர்த்து நல்ல கல்வியைக் கொடுத்து நல்ல வேலைக்கு அனுப்பி பொறுப்புள்ள குடிமகனாக வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும் எனக் கூறிய நீதிபதி தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துள்ளார்.

Categories

Tech |