நடிகர் கவின் லிப்ட் படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நடிகர் கவின் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். தற்போது நடிகர் கவின் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் லிப்ட் படத்தில் நடித்துள்ளார் . இந்தப் படத்தில் நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். எக்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார்.
#GiliGiliGiliGujiliGujili with @Kavin_m_0431 & #JafferSadiq 😍🕺
This one is 🔥Upload #InnaMylu reels using the hashtag #LiftChallenge and share them with us!
@Siva_Kartikeyan @willbrits @Kavin_m_0431@Actor_Amritha @VineethVarapra1 @Hepzi90753725@LIBRAProduc pic.twitter.com/do47G1GKUe— Think Music (@thinkmusicindia) April 28, 2021
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இன்னா மயிலு என தொடங்கும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருந்தார். இந்நிலையில் இந்த பாடலுக்கு நடிகர் கவின் பாவக்கதைகள் பட நடிகர் ஜாபருடன் இணைந்து நடனமாடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.