Categories
மாநில செய்திகள்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்…. 7 நாளில் கல்லூரியில் சேர வேண்டும்…. மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு….!!!!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் பொது மற்றும் தொழிற்கல்வி கவுன்சிலிங் 25 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான ஆன்லைன் விருப்ப பதிவு உள்ளிட்ட கால அட்டவணை மற்றொரு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. கவுன்சிலிங் நான்கு சுற்றுகளாக நடைபெறுகிறது. இதில் 1.49 லட்சம் இடங்களுக்கு 1.56 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்களும் பொது கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

கவுன்சிலிங் அட்டவணை சம்பந்தப்பட்ட கட் ஆப் மதிப்பெண் மற்றும் தரவரிசை பெற்றவர்கள் அதற்கான தேதியில் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை சாய்ஸ் பில்லிங் முறையில் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் பதிவு செய்த முன்னுரிமை வரிசை, காலியிடங்கள் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.அவ்வாறு ஒதுக்கப்பட்ட கல்லூரியை ஏற்பதற்கான அவகாசத்திற்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு உறுதி செய்தவர்களுக்கு மட்டுமே இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.ஏழு நாட்களுக்குள் ஒதுக்கீடு கிடைத்த கல்லூரிகளில் கட்டாயம் சேர வேண்டும். அப்படி சேராவிட்டால் அடுத்த சுற்று மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். ஏதாவது சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள கவுன்சிலிங் உதவி மையத்தை அணுகலாம் அல்லது www.tneaonline.org/என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |