தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலங்களில் டிரைவர் லைசென்ஸ் பெறுவதற்கான தேர்வு தொடர்பாக புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கணினி முறையில் அனைத்து பணிகளும் நடந்து வருகிறது.
அனைத்து ஓட்டுநர் உரிமம் தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடைபெறும். திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பொதுமக்களிடம் இருந்து பெறும் விண்ணப்பங்களுக்கும், செவ்வாய், புதன் நாட்களில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம் வரும் விண்ணப்பங்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைப்படி தேர்வு நடத்தி டிரைவர் லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.