குஜராத் மாநில அரசு உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு வருடத்திற்கு இரண்டு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 38 லட்சம் பயனாளிகள் பயனடைவார்கள். அது மட்டுமல்லாமல் சிஎன்ஜி மற்றும் பி என் ஜி எரிவாயு விலையை 10 சதவீதம் குறைவதாகவும் குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் சி என் ஜி கேஸ் சிலிண்டர் விலை கிலோவுக்கு ஏழு ரூபாயும், பி என் ஜி விலை 6 ரூபாயும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக 14 லட்சம் வாகன ஓட்டிகள் பயனடைவார்கள்.அது மட்டுமல்லாமல் உஜ்வாலா பயனாளிகளுக்கு வருடத்திற்கு இரண்டு இலவச கேஸ் சிலிண்டர்களும், சிஎன்சி மற்றும் பி என் ஜி எரிவாயு விலை குறைப்போம் பொதுமக்களுக்கான தீபாவளி பரிசு என குஜராத் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.