கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காலை வேளையில் பணிக்கு தாமதமாக வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கிறது. அண்மையில் மண்டியா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிக்கு மந்திரி நாகேஸ் சென்றிருந்தபோது, அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்திருந்தார்கள்.
இந்நிலையில் கர்நாடகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிகள் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயத்தில் ஆசிரியர்களின் வருகைபதிவு செய்ய பயோ மெட்ரிக்கும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.