Categories
தேசிய செய்திகள்

இனி 15 நாட்களுக்கு ஒருமுறை….. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு…..!!

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசித் செலுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் அந்த மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அது மட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கோவிட் பரிசோதனை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்வு போன்றவற்றை வருகின்ற ஜனவரி 15 வரை தள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடுவதற்கு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து தியேட்டர்கள் மற்றும் மால்களுக்கு செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். திருமண நிகழ்வுகள், மாநாடுகள் நடத்துவது மற்றும் பொது இடங்களில் அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அரசு ஊழியர்கள் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்கவேண்டும். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் சென்றால் ரூ 200 மற்ற பகுதிகளில் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |