இந்திய குடிமக்கள் ஒவ்வோவருக்கும் ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அதை பதிவு செய்த நாளில் இருந்து சரியாக பத்து வருடத்திற்கு ஒருமுறை, அடையாள ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் மோசடிகள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக ஆதார் அட்டை பெறும்பொழுது அளித்த அடையாள சான்றிதழ்களை பத்து வருடத்திற்கு ஒருமுறை அளித்து புதுப்பித்துக் கொள்வதன் மூலமாக ஆதார் அட்டையின் உண்மை தன்மை உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள து. ஆதார் அட்டை விவரங்களை உறுதி செய்யும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான வசதி மை ஆதார் இணையதளம், மை ஆதார் செயலி மூலமாக பயனர்களே செய்து கொள்ளலாம் அல்லது ஆதார் சேவை மையங்களிலும் நேரடியாக சென்று பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.