புதிய கல்விகொளகை குறித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அதில், தாய்மொழிக் கல்வியின் மூலம், மாணவர்களின் புரிதல் திறன் மேம்பட்டு, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட முடியும். கற்றல், ஆய்வு, கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, மனப்பாடக் கல்வியிலிருந்து சிந்தனை ஆற்றலை வளர்க்கும் முறைக்கு மாறுவதற்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும். இளைய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்புகளையும், 21ஆம் நூற்றாண்டில் அவர்களின் வளர்ச்சியையும் புதிய கல்விக் கொள்கை உறுதி செய்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதுநாள் வரையில் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் இக்கொள்கைகள் மூலம் தீர்க்கப்படும். வேலையை தேடுவதற்கு பதிலாக, வேலையை உருவாக்குவதே புதிய கல்விக்கொள்கை. புதிய கல்விக் கொள்கை ஏற்கனவே நடைமுறையில் இருந்த கல்வித் திட்டத்தில் இருந்த பல இடர்பாடுகளை நீக்கி, அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அனைத்து தரப்பினரும் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் புதிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.