இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் கலாச்சாரமாக மாறிவிட்டது. கையிலுள்ள ஸ்மார்ட்போனில் ஆர்டர் செய்தால் எல்லாமே வீடு தேடி வருகிறது. அதுவும் குறிப்பாக உணவுப் பொருட்களை அதிகமாக ஆர்டர் செய்து வாங்குகின்றனர். இதற்காக ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் அதிக அளவு உள்ளன. ஸ்விகி நிறுவனம் வெறும் சாப்பாடு மட்டும் அல்லாமல் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் சேவையும் தற்போது தொடங்கியுள்ளது. இன்ஸ்டா மார்டி என்ற பெயரில் மளிகை பொருட்கள் விரைவாக டெலிவரி செய்யப்படும். இந்த சேவையின் அடுத்தகட்ட முயற்சியாக ட்ரோன்கள் மூலமாக மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் பணியில் ஸ்விகி நிறுவனம் ஈடுபட்டுள்ளது .
ஆனால் இந்த சேவை இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை. இதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் முதற்கட்டமாக இந்த சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. அதற்காக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஸ்விகி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் மூலமாக உடனடியாக மளிகை பொருட்கள் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலிலேயே டெலிவரி செய்யப்படும். இந்த வசதி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சேவை சென்னை உள்ளிட்ட நகரங்களில் எப்போது தொடங்கும் என்று வாடிக்கையாளர்களும் இல்லத்தரசிகளும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.