துருக்கி நாட்டின் அதிபருக்கும், அவருடைய மனைவிக்கும் லேசான உடல்நல பாதிப்புகள் கூடிய ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாபிரிக்காவில் முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறத. இந்நிலையில் துருக்கியின் அதிபரான தயீப் என்பவருக்கும், அவருடைய மனைவிக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு மிக லேசான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, லேசான உடல்நல பாதிப்புடன் கூடிய ஓமிக்ரான் வைரஸ் தனக்கும், என்னுடைய மனைவிக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் நான் என்னுடைய “பணியை வீட்டில் இருந்தபடியே தொடர்வேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.