ஆரம்பத்தில் ரேஷன் கார்டை பெற நாம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அலைந்து பெற வேண்டி இருந்தது. தற்போது எங்கும் அலைய தேவையில்லை, நாம் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறும் வசதியை உணவு வழங்கல் துறை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் பயப்பட வேண்டாம். அதை உடனடியாக ஆன்லைன் மூலமாக திரும்ப பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் இணைய வசதி இல்லாதவர்கள் நேரடியாக மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்து பெறலாம்.
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறும் முறை: https://www.tnpds.gov.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் பயனர் நுழைவு என்பதனை கிளிக் செய்து உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அதன் பிறகு captcha குறியீட்டை பதிவிட வேண்டும். பிறகு மொபைல் எண்ணுக்கு OTP வரும். அடுத்து வரும் பக்கத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ பிரிண்ட் என்பதை கிளிக் செய்து அதில் உங்களின் மொழியை தேர்வு செய்து SAVE கொடுக்கவும். பிறகு உங்களின் ரேஷன் கார்டு பிடிஎப் வடிவில் கிடைக்கும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்சொன்ன விவரங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 118004255901 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.